பேச்சு/முனைவர் A.J.சொர்ணராஜ்

பேச்சு சிறப்புடையது.செல்வத்தில் சிறந்த செல்வம் பேச்சு என்பார் வள்ளுவர்.ஆக்கமும் அழிவும் பேசும் சொற்களால் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.
பேச்சில்லாமல் வாழ்க்கை உண்டா?பேசத் தெரிந்தவன் பிழைப்பான்.அதற்காக ‘பேச்சு என்ற கடலில் மூக்கோளம் முங்கி விடக்கூடாது’என்கிறது மலையாளப் பழமொழி.
ஒரு மனிதனின் பேச்சு அவனை யாரென உணர்த்தும்.மனத்தின் உள்ளார்ந்த எண்ணத்தையே பேச்சு வெளிப்படுத்தும்.
ஒரு தடவை சொன்ன வார்த்தையைத் திருப்பி எடுக்க இயலுமா?.
பேச்சு நல்லது; மௌனம் அதைவிடச் சிறந்தது.
” நல்ல சிந்தனையாளர்கள் வாய்ப்பேச்சு வீரர்களாக இருந்ததில்லை.எனவே குறைவாகச் சிந்திப்பவர்களே கூடுதலாகப் பேசுகின்றனர்”என்பார் மொன்டஸ்கியூ.
“மூடனின் இதயம் அவன் வாயில் இருக்கிறது.புத்திசாலியின் வாய் அவன் இதயத்தில் இருக்கிறது”என்பார் பிராங்ளின்.
மூடர்கள் வாயைத் திறந்தால் அறிவின்மையே வெளியாகும்.அவர்கள் சுயம் மறந்து,இடம் மறந்து,பார்வையாளர்களை மறந்து பேசுவர்.
அறிவு காவலுக்கு இருந்தால் சுண்டுகளுக்குத் தவறு நேர்வதில்லை.
சிலர் பொய் சொல்லவும் சாப்பிடவும் மட்டுமே வாயைத் திறப்பர்.
எப்போதும் அளவறிந்து பேசவேண்டும்.அளவறிந்து பேசாதவனைக் கசடன்(கீழ்மகன்)என்கிறது விவேக சிந்தாமணி.
பேசுவோம்!அளவறிந்து பேசுவோம்!
A.J.SORNARAJ