
- ஒரிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
மானுடம் விழையா
தண்டவாள மரண
தண்டனை விதிப்பில்
மாண்ட மானுட
கடைசி விசும்பல் எதைப்பற்றியோ?
2.ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்
உண்டோர் உறங்கியோர் இருந்தோர் பேசியோர்
ஏக்க கனவுகள் யாவும் கணத்தில்
பொடித்த உலோக பூகம்பம்.
3.ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்
இரண்டு பயணிகள் ரயிலிலும் கர்ப்பிணி
குழந்தைகள் கன்னியர் இல்லை என்று
சொல்லேன் தரவு முரசே!
4.ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்
பதிவுசெய்யா தீடீர் பயணியாக காலனும்
இறங்கிய ஊர் தெரிந்து விட்டது.
அவன் ஏறிய ஊர்?
5.ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்..
ஆயிற்று இன்று மூன்றாம் நாள்
டிராக்டரில் அள்ளவா
பிறந்தது மானுடம்
தண்டவாள ரண கொரோனா !
04/06/2023
காலை மணி : 10:07
