ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதல்/அழகியசிங்கர்

என்பா 126

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதல்
காலையில் அதிர்ச்சி
செய்தி பரவியது
இது விதி
என்றால் புரியும்
எதனால் என்றால் புரியாது

என்பா 127

ஒடிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
மரணம் இப்படியா
துக்கமாகப் போகவேண்டும்
யாரையும் குற்றம்
சொல்ல முடியாது
எல்லாக் கனவுகளும்
புதைந்தன

என்பா 128

ஒடிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
இந்தச் செய்தியைப்
கேட்ட போது
உங்களுக்கு வாழ்க்கையில்
அர்த்தம் தோன்றுகிறதா?
இல்லை இல்லை இல்லை

என்பா 129

ஒடிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
இப்போது நாம்
என்ன செய்வது?
இறந்து போனவர்களுக்கு
ஒரு நிமிடம்
அஞ்சலி செலுத்தலாம்
இல்லையா?

என்பா 130

ஒடிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
நாம் யார்?
அவர்கள் யார்?
சாவைத் தேடி
ஓடினார்கள் போலும்
நாம் என்ன சொல்ல?