சுரேஷ் ராஜகோபால் கவிதை

ஒடிசா ரயில்
கோர விபத்து
கதறினேன்
கண்ணீர் விட்டேன்
செய்தி கேட்டு
இந்தச் செய்தி
மட்டுமே வந்தவண்ணம்
இருக்குதே இறைவா!
யாரை குறைசொல்ல
யாரிடம் விண்டுரைக்க
கவனப் பிசகா?
ஊழிக் காலமா?
ஏனிந்த கொடுமை?
உலகமே வருந்தி
கலங்குதே ஊனுயிர்
மடிந்த செய்தியினால்