முகம் திருப்பும் ஜோடிகள்/கிரிஜா ராகவன்

ஜோடி என்பதே
ஒன்றுக்கு ஒன்றானது
இணைந்து நிற்பதே
ஜோடிக்கு அழகு

இணைவரின் முரண்
இதயத்திற்கும்
இல் வாழ்விற்கும்
இசைவில்லா துன்பம்

சேர்ந்த ஜோடி
காந்தம் போன்றது
முரண்டும் ஜோடி
கருமுள் ஒத்தது

அன்பால் இணைந்தால்
அதுதான் ஜோடி
அதனைத் தொலைத்தால்
பிரிவே உறுதி

காதலில் கரைந்து
கனிவுடன் கலந்தி
முகம் திருப்பா ஜோடியாய்
அகம் குளிர வாழ்வோம்