
கவிதை எழுதியாகிவிட்டது…
அவரவர் கருத்தையெல்லாம்
சொல்லியாகிவிட்டது…
உயிர்காண உயிர் தவித்த தவிப்பை ….
வியாபாரப்படுத்தி வானஊர்த்திக் கட்டணத்தை
பன்மடங்காய் உயர்த்தியாகிவிட்டது….
தனியார் மயத்தை ஊக்குவித்த அரசு ஒரு கொள்ளைக்கு உடந்தையாகி வேடிக்கைபார்த்தது.
அஞ்சலிகள் முடிந்தபின் அடுத்து என்ன….?
உனக்கிருக்கிறது ஆயிரம் செயலிகள்…
கடந்துசெல்லக்காரணங்கள்…
விபத்தைப்பற்றி என்ன பேசியென்ன…
இழந்ததை யார் மீட்டுவரமுடியும்….?
ஊனமான உடலினை எத்தனைகாலம்
தூக்கிச் சுமக்கமுடியும்….?
தவறுக்கான காரணங்கள்…விசாரணைகள்
மீண்டும் ஒருவிபத்தை தவிர்க்கப்போவதில்லை….
இழந்தவர்களுக்கு வடுக்கள் மட்டும் இருக்கும்
பலதலைமுறைக்கு மாறாமலே.
