
ஒப்பனைகள் அற்ற முகங்கள்
ஓராயிரம் கனவுகளை நனவாக்கும் பார்வை
தெளிந்த குரலில் இசைக்கும் தெய்வீக பாடல்
புரிந்தும் புரியாமலும் பாவனை செய்யும் மானுடம்
பறவைகளின் இனிய மொழி கலப்படமற்ற அன்பின் கானம்
வாழி நீவிர் பறவைகளே
நீடூழி
நிம்மதியின் சாரலை கீத மழையாய் பூமியில் பொழிந்தபடி.
5-6-2023.
