
அம்மாவை ஞாபகப்படுத்துகிறது
என்றாய்
கடலைப் பார்த்தபடி.
ஆசிரியரை ஞாபகப்படுத்துகிறது
என்றேன் நான்
கடலைப் பார்த்தபடி.
பெரிய விளையாட்டு மைதானத்தை
ஞாபகப்படுத்துகிறது
என்றான் சிறுவனொருவன்
கடலைப் பார்த்தபடி.
அலையும் நுரையுமாய்
நீலச்சிரிப்பு சிரித்தபடி
ஓசையெழுப்பியது கடல்.
