க.சோமசுந்தரி

இளைப்பாறும் நிழலில்
வந்து அமரும்
சிறுபறவையாய்
மெல்ல…தொடங்குது
ஒரு நாளின் முதல் நாழிகை!

பரிதிக்கு முன்னே
எழுந்து ஓடினாலும்
சமையலறையின் கடைசி வாசமாய்…
மிச்சமிருக்கிறது.. சில
சாப்பிடாத பொழுதுகள்!

அலுவலக கோப்புகளில்
கரையும் போதெல்லாம்…
நதியோரத்து
தாழம்பூ வாசனையாய்
எங்கிருந்தோ இசைக்கிறது
மனதிற்கு பிடித்த பாடல்!

சொல்ல தெரியாத
நிமிடங்களில்…
அன்றைய நாளில்
இன்னும் மிச்சமிருக்கிறது
நிறைய…!!

இயந்திரமாய்…
தொலைந்து போகும் போதெல்லாம்…
சில சொற்களும்…!!
ஒரு கவிதையும்…!!
இது போதும் ….
இன்றைய நாளின் உயிர்ப்புக்கு…!

3 Comments on “க.சோமசுந்தரி”

  1. தொலைந்து போகும் போது , சில சொற்கள் , ஒரு கவிதை போதும் மீண்டும் உயிர்த்து எழ !!!. கவிதை எந்த வடிவிலும் இருக்கக் கூடும். ஒரு படம், ஒரு ஓவியம், ஒரு புன்னகை, ஒரு தலையசைவு கூட கவிதை தான் . சொற்கள் மூலம் கூட கவிதை சொல்லலாம் . அருமை, சிறப்பு

  2. தொலைந்து போகும் போது , சில சொற்கள் , ஒரு கவிதை போதும் மீண்டும் உயிர்த்து எழ !!!. கவிதை எந்த வடிவிலும் இருக்கக் கூடும். ஒரு படம், ஒரு ஓவியம், ஒரு புன்னகை, ஒரு தலையசைவு கூட கவிதை தான் . சொற்கள் மூலம் கூட கவிதை சொல்லலாம் . அருமை, சிறப்பு .

  3. தொலைந்து போகும் போது , சில சொற்கள் , ஒரு கவிதை போதும் மீண்டும் உயிர்த்து எழ !!!. கவிதை எந்த வடிவிலும் இருக்கக் கூடும். ஒரு படம், ஒரு ஓவியம், ஒரு புன்னகை, ஒரு தலையசைவு கூட கவிதை தான் . சொற்கள் மூலம் கூட கவிதை சொல்லலாம் . அருமை, சிறப்பு . பாராட்டுக்கள்

Comments are closed.