
நேற்று (09.06.2023) கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் நான் வாசித்த flash கவிதைகள்.
1.
என் மீது
அன்புகொண்ட சில பேர்களும்
அன்பு இல்லாத சில
பேர்களும்
இருக்கிறார்கள்
ஆனால் –
நான் நினைப்பது
என்னைப் பற்றிதான்
2.
இன்று
மதியம் நல்ல வெயில்
காற்று இல்லை
புழுக்கம்
என்ன செய்வது ?
3.
நான்
காதலித்த பெண்
நட்சத்திரமாய்
மாறி விட்டாள்
தூரத்தில்
அவளை மட்டும்
வானத்தில்
இரவில்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
(தொடரும்…)

அருமை