பிரஸ்னோபனிஷதம்/எஸ்ஆர்சி

நான்காவது    பிரஸ்னா

பகுதி 4

சவுர்யயானி கார்க்யா மற்றும் பிப்பலாதர்.

1 சூர்யனின் பேரன் கார்க்யா சூரியனிடம் வினா வைத்தார்.

பகவானே மனிதனில் உறக்கம் என்பது என்ன? மனிதன் எப்படி உறக்கத்திலிருந்து எழுகிறான். கனவு பார்க்கும் தேவர்கள் யார்?யாருடையது இந்த மகிழ்ச்சி. எதனைச்சார்ந்தவை இவை?

2.பிப்பலாதர் விடை சொன்னார்.

 ஓ கார்க்யா

 சூரியன் தன் ஒளித்தட்டோடு  

மறைந்து பின் எழவில்லையா.

 இப்படி  மனித மனம் எல்லாவற்றையும்

ஒருங்கிணைக்கிறது

. உறக்கத்தின்போது  காது கேட்காது

,கண் பார்க்காது,மூக்கு நுகராது

, உடல் உணராது, பேச முடியாது,

 எதனையும்  உட்கொள்ளமுடியாது,

 அனுபவிக்க வாய்க்காது,

இடம் பெயரமுடியாது,

அசைதல் முடியாது,

 ஆகத்தான் அவன்

 உறங்குகிறான் என்கிறோம்.

3.பிராணாக்னி  இவ்வுடலில் விழித்து இருக்கிறது. அபானா  என்பது சமையலறை நெருப்பு. வ்யானா என்பது அன்வஹர்ய பசனா நெருப்பு. ப்ராணா என்பது அஹவனியா நெருப்பு. கர்ஹபத்யா நெருப்பிலிருந்து இது பெறப்படுகிறது.

இதயத்தின் தெற்கு பாகத்தினின்று வெளிப்படும் வ்யானா என்பது அன்வஹர்யபசனா. அது தக்‌ஷிணாக்னி எனப்படும்.

உறக்கத்தின் போது அபானாவிலிருந்து அஹவனியா எனும் ப்ராணா  நெருப்பு பெறப்படுகிறது.

4.சமானா பணியைச் சரியாகப் பிரித்து வழங்குகிறது. எனவே அது ஹோத்ரி (புரோஹிதர்).  மனம் என்பது  யக்ஞம் செய்வோன். ,உதானா  என்பது யக்ஞத்தின் பலன். உதானா என்பதுவே  யக்ஞம் செய்வோனை வழி நடத்துகிறது.

5.மனம் கனவில்

 பெருமையை அனுபவிக்கிறது. 

அவன் பார்த்ததைப்பார்க்கிறான்.

கேட்டதைக்கேட்கிறான்.

  பல தேசங்களில் பல இடங்களில்

அனுபவித்ததை அனுபவிக்கிறான்.

பார்த்ததைப் பார்க்காததை

கேட்டதைக்கேட்காததை

அனுபவித்ததை அனுபவிக்காததை

 உண்மையை உண்மையில்லாததை

அனைத்தையும் காண்கிறான்.

அவனே அனைத்தும்.  அவனே பார்க்கிறான்.

6.ஒளி அவனை

ஆட்கொள்கிறபோது

மனம் கனவு காண்பதில்லை.

மகிழ்வின்பம் அவன் உடலில் எழுகிறது.

7.அன்பனே  ,ஒரு பறவை கூட்டிற்குச்சென்று வாழ்வதொப்ப  பேரான்மாவில் இவை அத்தனையும் வதிகின்றன.

8        பூமி  அதனுள் உறையும் மூலகங்கள்,

நீர் அதனுள் உறையும் மூலகங்கள்,

 தீ அதனுள் உறையும் மூலகங்கள், 

காற்று அதனுள்  உறையும் மூலகங்கள்,

 வான் அதனுள் உறையும் மூலகங்கள்,

கண் காணப்படுபவை,

செவி கேட்கப்படுபவை,

 நாசி நுகரப்படுபவை,

கரங்கள் பிடிபடுபவை,

 கால்கள் நடந்துசெல்லக்கூடிய இடங்கள்,

 பிறப்புருப்பு அதனால் அனுபவிக்கப்படுபவை ,

கழிவுறுப்பு கழிக்கப்படுபவை,

மனம் நினைக்கப்படுபவை

,புத்தி  தீர்மானிக்கப்படுபவை,

 தன்னுணர்வு அதன் பொருள் 

,சித்தம் அதன் பொருள்,

 ஒளி அதன் பொருள்,

பிராணன் அது தாங்குபவை,

இவை ஆழ்ந்த உறக்கத்தின் போது

உயர் ஆன்மாவில் ஓய்வெடுக்கின்றன.

9.காண்பவன், உணர்பவன்

,கேட்பவன், நுகர்வோன்,

 சுவைப்பவன், நினைப்போன்,

 அறிபவன், 

புருஷா என்கிற புத்திசாலி ஆன்மா.

 அவனே செய்பவன்

 அழிக்கமுடியாத உயர் ஆன்மாவில்

அவன் வசிக்கிறான்.

10.உயர்ந்த,அழிவில்லாத

(,அவன்) புருஷன் பெறுவோன். 

நிழலில்லாத  நிறமில்லாத 

தூய அழிவில்லாத

 அத( வ)னை அறியும்

அந்த அன்பன்,

 யாதும்  அறிந்தவன்,

 அனைத்திலும் உறைபவன்.