தரிசனம்/ஆர்க்கே

.

நேர்மையாயிருப்பதொன்றும்
பிரம்மப் பிரயத்தனமல்ல.

நம் பாதைப்பயணத்தில்
எதிரெதிராய்
வந்து வந்து போகும்
பொய்களையும்
புறங்களையும்

நம் குணமழிவீழ்
வீண்பழிகளையும்

நம் கண்ணெதிர்
நேர்நடப்பு தாக்குதல்களையும்

கண்காணா மறைபோர்களையும்

நம் மௌனத்தை
தம் சாதக திசையாக்கும்
மானுடப் போக்கையும்

காலத்திடம் ஒப்படைத்து
பொறுமைக் கோல் பற்றி

மெல்ல மெல்ல கடந்து போனால்
பின்னால் தொடரக்கூடும்
நாம் காணவிழைவுறும்
நேர்மைச் சிகர தரிசனம்!