இரு கவிதைகள்/மதுவந்தி

(நேற்று 09.06.23 அன்று நடந்த விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் நான் கலந்து கொள்ள இயலவில்லை. நான் வாசிக்க எடுத்து வைத்த 2 கவிதைகள் கீழே பதிவு செய்கிறேன். )


உடல் மொழி


எனக்கும் தூக்கத்துக்கும் போட்டி.
நான் காணொளி பார்த்தேன்.
வானொலி கேட்டேன்.
புத்தகம் புரட்டினேன்.
வாசல் அழைப்பு மணியொலிக்க,
அவசரமாய் எழுந்த பின்,
தோன்றியது,
எப்போ தூங்கினேன்?



ஒற்றைத் தலைமை


கோடானு கோடி விண் மீன்கள்,
அயராது சுற்றிவரும் கிரகங்கள்,
சில நிலவுகள் ,
எல்லாமும் இருந்தாலும்,
தூர தூரம் கடந்து,
ஒளியும் வெம்மையும்,
கொடையாய் வழங்கி,
வாழ்வின் ஆதாரமான
சூரியனே!!!
எம் புவனத்துக்கு நீயே
ஒற்றைத் தலைமை.

¹11