flash கவிதைகள்/அழகியசிங்கர்

09.06.2023 அன்று ‘கவிதை வாசிக்கலாம் வாங்க 6 ‘ கூட்டத்தில் வாசித்த flash கவிதைகள்

4.
சமீபகாலமாய்
நான் எழுதுகிற
கவிதைகளை
யாரும் படிப்பதில்லை
என்று தீர்மானம் செய்து விட்டார்கள்
நானோ
யாரும் படிக்காத
கவிதைகளை
அடுக்கிக் கொண்டே
போகிறேன்.

5.
தெருவில்
விழுந்து கிடந்த
ஒரு ரோஜாப்
பூவை
பார்த்தேன்
அது
ஓராயிரம் கதைகள்
கூறின

6.
சிலர் பேசுகிறார்கள்
சிலர் பேசுவதில்லை
சிலர் காதலிக்கிறார்கள்
சிலர் காதலிப்பதில்லை
அதனால் என்ன
சிலர் கவிதைகள் எழுதுகிறார்கள்
சிலர் கவிதைகள் எழுதுவதில்லை
ஆனால்
பொதுவாக யாரும்
கவிதைப் புத்தகங்கள்
வாங்குவதில்லை