கனவிலொரு திருமணத்தைக் கண்டேன் /கான்ஸ்டாண்டின் சிமொனவ்

தமிழில் : க.மோகனரங்கன்

கனவிலொரு திருமணத்தைக் கண்டேன்
நீதான் மணமகளெனவும் நினைத்தேன்.
மணக்கோலத்தில் நீயும், வாசல்முகப்பில் யாசகனாய் நானும் – இது மெய்யாகவும் இருக்கலாம்!

கனவில் கண்டாற்போலவே அது நிகழட்டும் !
ஒரு வாக்கினை மாத்திரம்
நீ காத்தருள வேண்டும்.
முன்வாயிலில் நிற்குமென் கைகளில் –
இரக்க மிகுதியால்
தானமென எதனையும் அப்போது தந்துவிடாதே !

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02ZxTAofRFmN1cmx57PyU3AWW5E22mEh99hSJ6zEooW1NPQuoi4E3u6mAeEY74zztMl&id=100003028224510&mibextid=Nif5oz