பிக்னிக்/அழகியசிங்கர்

கொரானா கடுமையாக இருந்த காலத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம். வெளியே தலை காட்ட முடியவில்லை.

அப்பா அலுவலகம் போக முடியவில்லை. அம்மா பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அவள் லோகல் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாள்.

நானும் பள்ளிக்கூடம் போகவில்லை. பத்தாம் வகுப்புப் படிக்கிறவள்.

இப்போது இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.
எல்லோரும் எங்காவது
பிக்னிக் போகலாமென்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

பிக்னிக் போக ஒரு இடம் கண்டு பிடித்தோம். 15 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த இடம் இருந்தது.

மலை சூழ்ந்த இடம். காரை ஓட்டிக் கொண்டு அங்குப் போனோம். மலையைச் சுற்றி சுற்றி ஓடி வந்தோம். கண்கொள்ளா காட்சி. எங்கும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. எல்லோரும் முகக் கவசம் அணிந்திருந்தோம்.

மலைக்குப் பக்கத்தில் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆறு இருந்த இடத்தில் புல் வெளியில்
பாயை விரித்துப் போட்டு
கொண்டு வந்த சாப்பாடை எடுத்து வைத்துக்கொண்ட மர்ந்தோம்.
சுற்றி வந்ததில் களைப்பு தெரியவில்லை.

பழைய மகிழ்ச்சி எங்களிடம் கரை புரண்டு ஓடியது.

“இனிமேல் அடிக்கடி சுற்றுவோம், ” என்றார் அப்பா.

அம்மாவும் நானும் உற்சாகத்துடன் தலை ஆட்டினோம்.

“கொரோனா ஒழிக.. கொரோனா ஒழிக…”என்று நான் சத்தம் போட்டேன்.

அங்குள்ளவர்கள் விசித்திரமாக எங்களைப் பார்த்தார்கள்.

பின் அவர்களும் ஒழிக என்று சத்தம் போட்டார்கள்.

வீடை அடையும்போது இரவு ஆகி விட்டது.

சில நாட்களில் மீண்டும் கொரோனா தாண்டவம் ஆடி ஆரம்பித்தது.

வேறு வழியில்லை திரும்பவும் வீட்டிலேயே அடங்கிக் கிடந்தோம்.

நாங்கள் பிக்னிக் போனது கனவு மாதிரி இருந்தது.