சித்தலிங்கையா கவிதை

தமிழில் – பாலசுப்ரமணி மூர்த்தி

நான் இறந்தால் நீங்கள் அழுவீர்கள்
அழுகுரல் எனக்கு கேட்கப்போவதில்லை
என்னுடைய வலிகளுக்காக இப்போதே
கொஞ்சம் வருந்தக்கூடாதா ?
பூமாலைகளை எனக்கு போடுவீர்கள்
பார்க்கமுடியுமா என்னால்
இப்போதே சிறு பூவை எனக்கு
கொடுக்கக்கூடாதா ?
என் புகழ் பாடுவீர்கள்
எனக்கு கேட்குமா சொல்லுங்கள்
இப்போதே என்னை புகழ்ந்து
ஓரிரு வார்த்தைகள் பேசக்கூடாதா ?
என்னுடைய தவறுகளை மன்னிப்பீர்கள்
அதை நான் அறியப்போவதில்லை
உயிரோடு இருக்கும்போதே மன்னிக்கக்கூடாதா ?
என்னுடைய இன்மையை நினைத்து வருந்துவீர்கள்
எனக்கு தெரியப்போவதில்லை
இப்போதே என்னை சந்திக்கக்கூடாதா ?
என் மறைவு செய்தியை கேட்டவுடன்
என் வீட்டிற்கு விரைந்து வருவீர்கள்
இரங்கலை தெரிவிப்பதற்கு பதிலாக
இப்போதே இன்ப துன்பங்களை
பகிர்ந்துக்கொள்ளக்கூடாதா ?
மின்னி மறையும் முன்னர் பகிர்ந்து
வாழும் வாழ்க்கை சிறந்ததல்லவா ?

( கன்னட கவிஞர் சித்தலிங்கையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 🖤