அப்பாவைப் பெற்ற மகள்/சீ. பாஸ்கர்

அழைப்புமணியின் ஓசைக்கேட்டு
ஆசையுடன் ஓடிவந்து
கதவைத் திறந்து
கைகளில் இருக்கும்
பைகளை வாங்கிக்கொண்டு
உட்காரவைத்து தண்ணீர் கொடுத்து
ஏன் தாமதம் என
செல்லமாய் கோபித்துக்கொள்ளும்
மகளின் முகத்தில் தெரிகிறது
இறந்துபோன
அம்மாவின் உருவம்