ஆசி தா அப்பா/காயத்திரி தண்டபாணி

அப்பா..
இன்று பள்ளி துவங்குகிறது..
உனை
மனதார வேண்டுகிறேன் அப்பா..
எனை நம்பி
என்னிடம்
ஒப்படைக்கப்படும்
குழந்தைகள்
ஆர்வத்தோடு
கற்பதை புரிந்து கொண்டு
கற்கும் வகையில்
நன்முறையில் கற்பிக்கும்
ஆற்றலை எனக்குத் தந்து
நல்வழி காட்ட
நீ துணை வா அப்பா..
நல்வழிகாட்டு அப்பா..
என் மாணவர்கள்
எழுதும் நோட்டுகளையும்
நீ இப்படி சௌகர்யமாய்
அமர்ந்துகொண்டு
படித்துப்பார் அப்பா..
அவர்கள் எழுதுபவற்றை
நீ ஓர் முறை பார்த்தாலே போதும்
அவர்கள் தலைமுறையே புத்திசாலிகளாய் மாறும்
பேறு பெறும்..
வா அப்பா..
வந்து
ஆசி தா அப்பா…

2 Comments on “ஆசி தா அப்பா/காயத்திரி தண்டபாணி”

  1. குட்டி கதையை எழுதி மிக பெரிய போதனையை, இன்றையத் தலைமுறைக்கு தெரிய வைத்துள்ள எழுத்தாளர் காயத்ரி தண்டபாணி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    1. தங்களின் பாராட்டைக் கண்ட மனதுள் வந்த உணர்வை மகிழ்வென்ற ஓர் வார்த்தைக்குள் அடக்க முடியவில்லை..கோடானு கோடி நன்றிகள்.

Comments are closed.