மறக்க முடியாத சந்திப்பு!/எஸ் வி வேணுகோபாலன்

குவிகம் திரு சுந்தரராஜன் அழைப்பில் இன்று மாலை குவிகம் அன்பர்களின் ஓர் அருமையான சந்திப்பு அசோக் நகர் ஶ்ரீ மஹாஸ் ஓட்டலில் நடைபெற்றது. மாலை 6 மணிக்குள் கிட்டத்தட்ட எல்லோரும் குழுமி விட்டனர். இங்கே உள்ள நண்பர்கள் பெயர்களைக் கண்டுபிடியுங்கள், இந்த க்ளூவில் இருந்து என்று சொல் விளையாட்டில் தொடங்கினார் சுந்தரராஜன். மடோனா என்றார் (அழகிய சிங்கருக்கு, கைலாச தேசத்தின் அதிபர் – நித்தியானந்தமாம்!). தென்காசி கணேசன், டாக்டர் ஜெ பாஸ்கர் அழகான இசைப் பாடல்கள் இசைத்தனர். தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் தான் மேற்கொண்ட விஜயம் பற்றி நித்தியானந்தம்!

அண்மையில் கவிஞர் இந்திரன் 75 வயது நிறைவில் அவரது படைப்புலகம் கொண்டாடப் பட்ட நிகழ்வுக்குச் சென்று வந்தோம் என்றார் சுந்தரராஜன்.

இந்திரன் எழுத்துகள் பற்றிக் கொஞ்சம் பேசவா என்று கேட்டு எழுந்தேன், எண்பதுகளில் இந்தியன் வங்கியில் ஒரு பேச்சுப் போட்டியில் பரிசு பெற்று வருகையில் பாராட்டி விட்டுப் போனவர் வங்கி அதிகாரி என்று மட்டும் ஊகித்தவன், அவர் தான் இந்திரன் என்று திரு ஜி இராமதாஸ் எனும் மற்றோர் அதிகாரி சொல்ல அறிந்து மறு நாள் கோடம்பாக்கம் ஸ்டேஷனில் பார்க்க நேர்ந்து அவரது தொகுப்பு பற்றிச் சொல்லி அவரது வியப்பில் இருந்து விரிந்த தோழமை அன்பில் கலந்த கதை சொல்லிவிட்டு, அவரது அருமையான மொழிபெயர்ப்பில் காற்றுக்கு திசை இல்லை தொகுப்பில் இருந்து மோதிலால் ஜத்வானி எழுதிய செலவழித்த புன்னகைகள் (சிந்தி மொழி) கவிதை, அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் தொகுப்பில் இருந்து லாங்ஸ்டன் ஹியூஸ் எழுதிய இயேசுவானவர் திரும்ப வருவாரெனின் கவிதை இரண்டையும் நினைவில் இருந்து சொன்னேன். இந்திரன் கவிதை வரி ஒன்றும்!

ஏழரை மணிக்கு சந்திப்பு நிறைவு பெற்று, வயிற்றுக்கும் சிறிது (அல்ல பெரிதாகவே) ஈயப் படும் என்று உணவறையில் சங்கமித்து உற்சாக விடை பெற்றோம் எல்லோரும்!

2 Comments on “மறக்க முடியாத சந்திப்பு!/எஸ் வி வேணுகோபாலன்”

  1. அருமையான வர்ணனை.
    நான் வராமல் பொய் விட்டேனே,நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்று மனம் நோகுது.

Comments are closed.