பிக்னிக்/விஜயலக்ஷ்மி கண்ணன்

கவிதாவும் கண்ணனும் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு என்னை ப் பார்த்தும் பார்க்காதது போல இஞ்சி தின்ற குரங்குகள் மாதிரி சேஷ்டை பண்ணிக்கொண்டு ஏனோ தானோ என்று பிதற்றிக் கொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப் படுத் தியதாக எனக்குத் தோன்றியது.

“டேய் கண்ணா,என்ன விஷயம்?”

“அண்ணனும் தங்கையும் பேசி மூஞ்சியை காட் றீங்க?”

பதில் வரவில்லை.

“என்னடி கவிதா, நீ சொல்லு.”

“போம்மா, சொன்னா மட்டும்
செஞ்சு குடுத்துடுவியாக்கும்!”

“விஷயம் என்னவென்று சொன்னால் தேவலை.”

“எங்களுக்கு பள்ளிக்கூடம் திறக்க இன்னும்
எததனை நாள் இருக்கு, நீயே சொல்லு.”

“அப்பா அம்மாவை கேளு என்பார்.நீ அப்பாவை கேளு என்பாய்.
எங்க பாடு திண்டாட்டம்.”

கவிதா கடுகு போல பொரிந்து தள்ளி விட்டாள்.

“இப்ப கொரோனா காலம்.எங்கேயும் ப்ரீயா போக முடியலையே. ரொம்ப ஜாகிரதையா இருக்க வேண்டும்.
வியாதி வந்தா என்ன செய்ய முடியும்?”

குழந்தைகள் எங்கி போய் சோர்ந்து தான் போகிறார்கள்.

பள்ளிக்கூடம் திறக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை.
வழக்கப்படி திறப்பது என்றால் இன்னும் ஒரே வாரம் தான்.

கோடை விடுமுறைக்காக குழந்தைகள் காத்து கொண்டு இருப்பதும், விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்று நண்பர்களுடன் தாங்கள் விடுமுறை நாட்களை எப்படி எல்லாம் செலவழித்தோம். என்று கொட்டி கோஷிப்பதும் பெற்றோர் அறிந்ததே.

அப்படி எங்கும் சுற்று உலா போகவில்லை என்றால் மிகுந்த ஏமாற்றம் தான்.

“சரி,நான் அப்பாவிடம் கண்டிப்பா சொல்றேன்” என்று உறுதி மொழிக் கொடுத்து ஒரு வழியா காலை உணவு சாப்பிட வைத்தேன்.

என் கணவர் சிவராமன் ஆபீஸ் விட்டு வீடு வர சாயங்காலம் ஆகிவிடும். வந்தப்புறம் பேசணும்.பாவம் குழந்தைகள். தாயுள்ளம் நினைத்தது.

பசங்க தற்போது சமாதானம் ஆயிட்டாங்க.

அவர் வரணும்.. கொரோனா காலத்திலும் 30 பெர்சென்டு அட்டென்டேன்ஸ் வச்சு வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் ஆபீஸ், மற்ற நாட்கள் வீட்டில் இருந்தபடி.

முக மூடி,hand wash, சானிடைசெர், இப்படி பலவித முன் எச்சரிக்கை குறிகள் சகிதம்
காலம் ஓடிக் கொண்டிருந்தது.

மாலை நேரம், அவரும் வீடு திரும்பி ஆற அமர ஒரு கப் காராமணி சுண்டலுடன் சூடான காபியும் சாப்பிட்ட பிறகு நான் ஆரம்பித்தேன்.

“என்னங்க,பள்ளிக்கூடம் திறக்க ஒரே வாரம் தான் இருக்கு . பள்ளிக்கு நேராக சென்றாலும் செல்லாவிட்டாலுமபாடங்கள் ஆரம்பித்து விடும்.”

“இந்தக் கோடை விடுமுறை வீட்டோட பாவம் பசங்க.”

“எங்கயாவது ஒரு பிக்னிக் கூட்டிகிட்டு போயி வரலாம்.குழந்தைகளுக்கு ஒரு பெரிய சந்தோஷமாக. இருக்கும். நல்லா படிக்க ஒரு உந்துகோலா இருக்குமே,” என்று சொல்லிக் கொண்டே இருந்தபோது ,

அவரே, “பத்மா, நீ சொன்னது ரொம்ப சரி.”

“நானே வரும்போது யோஜனை பண்ணிக் கொண்டு வந்தேன்.
நாளை மறுதினம் ,அது தான் புதன் கிழமை , காலையிலே கிளம்பி என் ப்ரெண்ட் ரமேஷ் ராஜா வோடு பெரிய பண்ணை வீடு இருக்கு.சினிமா ஷூட்டிங் ஸ்பாட். ஃபோட்டோ அனுப்பியிருந்தான். ரொம்பவே குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
பிக்னிக் போன மாதிரியும் இருக்கும், ரொம்ப கூட்டம் சேராத இடம். இப்ப நமக்கு அந்த கூட்டம் சேராத இடம் தான் வேணும்.தக்க பாதுக்காப்போடுப் போய் வந்து விடலாம் பத்மா.”

எல்லாம் ரெடி பண்ணி வெச்சிக்கோ.
அங்கே சமையல்காரர் இருக்கரதனால் சாப்பாடும் ஒரு பிரச்சினை இல்லை. ஜாலியா இருக்கலாம்.

கிழக்குக் கடற்கரை சாலையில் சிவரா மன் குடும்பம் இன்னோவாவை ஓட்டிக் கொண்டு கோவளம் பண்ணை வீட்டற்கு வந்து சேர்ந்தது. கவிதாவும் கண்ணனும் இவ்வளவு சீக்கிரம் எல்லாம் நடக்கிறதே என்று வியந்து போனார்கள்.
நம் அப்பாவா?!

“வாங்க சார்,”விசாலமான கேட்டை திறந்து விட்டான் செக்யூரிட்டி.

வண்டி நின்றது. காரிலிருந்து இறங்கி பசங்க பறந்தாங்க.

சுமார் ஒன்பது மணி.

சூப்பர் காலை சிற்றுண்டி, நெய் மணக்கும் பொங்கல், கோஸ்து, சட்னி,மெது வடை,, ரவா கேசரி, காபி அல்லது பூஸ்ட்.
அப்பப்பா , கவிதாவும் கண்ணனும் உண்டு விளையாட போய் விட்டார்கள்.

நாங்களும் எங்கள் டிஃபின் முடித்துக்கொண்டு புல்வெளி க்கருகில் போட்டு வைத்திருந்த பெரிய ஊஞ்சல் எங்களை வாவா என்று அழைத்தது.

நாங்களும் எங்கள் இனிய பழைய நினைவுகளில் மூழ்கித் திணறி எழுந்தோம்.

“அம்மா இங்கே
பாரேன், வாத்து க்கள். நீந்தி விளையாடுவதை.
புல் வெளியில் உட்கார்ந்து அந்த தடாகத்தில் பூத்த தாமரை மலர்கள்,
வாத்துக்களின் குவாக் குவாக் சத்தம், நடை பந்தயம் போல ஒன்றுக்கு ஒன்று
போட்டிப் போட்டு நடை பயின்றது.காண மிக அழகு.

அருகில் இருந்த மரங்களின் நிழல் ஆறுதலாக இருந்தது.

மணி 12 ஆக, போதும், சாப்பிட்டு ஓய்வு எடுத்த பிறகு மாலை செஷன் என்று அப்பா சொல்லவே, எல்லொரும் மகிழ்சியாக உள்ளே நுழைந்து கதவை தாளிட்டு உடை மாறி மதிய உணவுக்கு மேஜை முன் அமர்ந்தோம்.

“எனக்கு இன்று ஓய்வு நாள்.நோ சமையல்.. நிம்மதி” என்றேன்.

கொரோனா காலம் என்பதால் முக கவசம் அணிந்து கொண்டு மூச்சு விட முடியாமல் இருந்தது. கைகளை கழுவி கிருமி நாசினி கைகளில் தடவி, பெரிய போராட்டம்.
மெனக்கட்ட வேல யும் கூட.
என்ன செய்ய?
இந்த ராக்ஷசன் எப்ப ஒழியுமோ?

மாலை நேரம் அவருடைய நண்பரும், மனைவி குழந்தைகளுடன் வந்து இன்னும் குஷியை கூட்டி விட்டார்கள்

ரொம்ப தேங்க்ஸ் ராஜா. நல்ல இடம், good enjoyment. என்று இவர் சொல்ல, அவரும் it is our pleasure என்றார்.
சாட் items பலவிதம் ரெடி பண்ணி செஃப் அன்பாய்த் திணித்தார்.

இரவு கேர்ரம் போர்ட் விளையாடி, ஊர்கதை பேசி உறங்க இரவு மணி ஒன்று.

“போதும் போதும்,நாளை காலை நாம் சென்னைக்கு திரும்ப வேண்டும்,”
என்று அவர் சொல்ல எல்லொரும் மகிழ்சியாக உறங்கினோம்.

காலை விடிந்தது.

விடியலின் அழகை கண்டு களித்து, சிற்றுண்டி முடித்துக்கொண்டு இரண்டு கார்களும் ஒன்றாக புறப்பட்டது.
மசாலா தோசையின் ருசியும், சர்க்கரை ப் பொங்கலின் மணமும் எங்கள் கூடவே வந்தது.

“பிக்னிக் எப்படி?”அப்பா கேட்டார்.

சூப்பர் அப்பா .thanks . ஒரு நாள் தான் என்றாலும் பசுமையான நினைவுகள் அடுத்த கோடை விடுமுறை வரையிலும் நெஞ்சை விட்டு அகலாது.

x