சென்னை to காட்பாடி பயணம்/விஜயலக்ஷ்மி கண்ணன்

இப்பொழுது எல்லாம் ரயில் பயணம் செய்வது என்றால் சிம்ம சொப்பனமாக இருக்க, வேறு வழயில்லாமல் காலைவேளையில் தூங்கிக்.கொண்டுஇருந்த என் எட்டு வயது மகள் மீனாவை எழுப்பி,தூக்கக் கலக்கத்தில் ,
மீட்டருக்கு மேல் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோவை பிடித்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து,
டிகெட் கவுண்டர் போய் நின்று வரிசையில் ஒன்பதாவது ஆள் நான்.
என் வாய்ப்பு வந்ததும் “இரண்டு டிக்கெட் காட்பாடி “என்றேன்.

என்ன ஜன நெரிசல்! அந்தக் கால வேளையிலும் மனித கடலாக தோன்றியது.
எங்கும் சத்தம், வண்டி பற்றி அறிக்கைகள் ஒலிபெருக்கியில் வந்த வண்ணம்.
மீனாவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வேக வேகமாக நடந்து வந்த பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ரயில்ப் பெட்டியில் உள்ள இருக்கயில் அமர்ந்தேன். மீனாவை மடி மீது தலை வைக்க,கால்களை நீட்டி படுக்க வைத்தேன். குழந்தைத் தூங்கட்டும்.
யாரும் எழசொல்ல முடியாது.அவளுக்கும் டிக்கட் உள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் பிரயாணம்.
கையில் ஒரே பிராயணப் பை.தோளில் பை.
அவ்வளவு தான்.

அம்மா காத்துக் கொண்டு இருப்பாள்.
ரொம்ப
மாதங்களாக மாப்பிள்ளைத் தேடி, என் தங்கைக்கு ஒரு வழியாக ஜாதகம் சேர்ந்து,பெண் பார்க்க இன்று மாலை வருகிறார் கள் என்ற உடன் அம்மா பாவம், கை கால் ஓடலைடி என்றாள்.
“சரி அம்மா, கவலைப் படாதே.நான் நாளை மதியத்துக்குள் வந்துவிடுகிறேன் “என்று நேற்று இரவே சொல்லி ஆசுவாசப் படுத்தி விட்டேன்.
அதனால் தான் இந்த பிரயாணம்.

காட்பாடி வந்ததும் முழித்து கொண்டாள் என் பெண் மீனா.
டக் என்று கையை பிடித்துக் கொண்டு இறங்கி விரு விரு என்று ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடை கட்டினேன்.

தெரு பெயரை சொல்லி ஏறி அமர்ந்து 15 நிமிடங்களில் அம்மா வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டோம்.

அம்மாவும் வாசலிலேயே நின்று “வா ,கமலா,கை.கால் கழுவிண்டு வா.குழந்தை மீனா வாடி போயிருக்கா,சாப்பிடலாம் வா.”என்று அம்மாவின் வாத்சல்யம் மிகுந்த குரல் எனக்கு காதில் இன்பத்தை தந்தது.
“கவலைப் படாதே அம்மா,எல்லாம் நல்லாவே. நடக்கும் “என்று ஆறுதல் சொன்னேன்.
அப்பா இல்லாமால் என்னையும் என் தங்கையையும் தனி ஒரு ஆளாக ,பாடுப்
பட்டு வளர்த்து எனக்கு திருமணமும் நடத்தி வைத்தவள்,என் தங்கையின் ஜாதகத்தை வைத்துக் கொண்டு பொருத்தம் சேர வில்லை என்று சொல்லித் தட்டி போயதால் மிகவும் கவலைப் பட அம்மாவின் உடல் நிலை சற்று பாதி க்கப்பட்டது.

தங்கை ரம்யாவை
அழைத்து அவளிடம் “மாப்பிள்ளை போட்டோவில் பிடித்ததா என்றும் கேட்டு,”
“வா வா,தலை வாரி பின்னி விடுகிறேன். பூ வாங்கி கொண்டு வந்திருக்கேன், வெச்சு விடறேன்.
அப்புறம் முகம் கழுவிண்டு வா, பளிச்செஎன்று அலங்காரம் பண்ணிக்கோ.”
அம்மாவின் நீல நிறப் பட்டு புடவைய கொடுத்து கட்டிக்க சொன்னேன்.

என்னை பெண் பார்க்க பத்து வருடங்கள் முன் என் கணவர் அவருடைய பெற்றோர்களும், உயிர் நண்பன்
பாலன் ஆகியோர் வந்தபோது அம்மா இந்த புடவயை கட்டிக்க சொன்னாள்.
ராசியான புடவை. அம்மாவின் பாசம் புடவையுடன் பின்னி பிணைந்து இருந்தது என்று தான் நான் நினைக்கிறேன்.
இன்று என் தங்கைக்கும் அந்த அதிர்ஷ்ட மழை பெய்ய வெண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

தங்கை ரம்யாவின் முகத்தில் கல்யாணக் களை தெரிந்தது.படித்து முடித்து விட்டு காட்பாடியிலேயே ஒரு தனியார் வங்கியில் வேலை பார்க்கிறாள்.
என் பெண் மீனாவையும்
அழகுப் படுத்தி பெண்ணுக்கு தோழியாக்கி உட்கார வைத்தேன்.

மாலை நாலு மணிக்கு மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து விட்டார்கள்.
என்ன ஆச்சர்யம்?

நான் காலையில் டிக்கட் வாங்க நின்றிருந்த போது எனக்கு முன்னால் வரிசையில் நின்று டிக்கட் வாங்கிய தம்பி ஆச்சே!
நம்ம வீட்டுக்கு வர ப் போகிறவர் என்று எதிர்பார்க்கவில்லை.
நாம் எதிர்பார்த்தது எல்லாமா நடக்கிறது அல்லது நடப்பது எல்லாம் எதிர்பார்த்ததா ?

ரம்யா தயார். மீனா அவளுடன் கூட உட்கார துணப் பெண்.
“வாங்க வாங்க
உட்கார்ந்து கொள்ளுங்கள்.”
உபசரித்த
வண்ணம்
அம்மா ரவா கேசரி நெய் மணக்க ,நான் உருளைக் கிழங்கு போண்டா, வடை என்று மாப்பிள்ளைக்கு, அவர்கள் வீட்டாருக்கும் உபசாரம் செய்து ரம்யாவை எல்லோருக்கும் காபி கொடுக்க சொல்லி ,நாங்கள் இரு பக்க விஷயங்கள் பரிமாறிக் கொண்டு இரு பக்கமும் திருப்தியாக இருந்தது.
மற்ற சீர் வரிசை,நகை பணம் பற்றி பேசி முடித்தோம்.
மாப்பிள்ளை சுந்தர் பார்க்க கம்பீர தோற்றம்.என்னை அடையாளம் கண்டு கொண்டு “மாமியை காலையிலேயே ஸ்டேஷன் லே பார்த்து விட்டேன்,”என்றார்.

ஒரே தங்கை,திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.
எந்த பிடுங்கலும் இல்லை.அப்பா இல்லாமல் வளர்ந்த ரம்யாவுக்கு பிள்ளயின் அப்பா
அன்பானவர் என்று தோன்றியது.
நல்ல இடம் .
முடித்து விடலாம் என்று தீர்மானித்து கொண்டோம்.
குரு அருள் வந்தால் எல்லாம் நல்லாவே சட்டுபுட்டுன்ன நடக்கும் என்றார். மரியாதை செய்து அவர்களை அனுப்பி வைத்தோம்.

ரம்யாவின் முகம் மலர்ந்து அம்மாவின் மனம் குளிர்ந்து பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

டும் டும் தேதியும் நிச்சயம் ஆகிவிட்டது.
அடுத்து அடுத்து கல்யாண வேலை கள்.15 நாட்கள் தான் உள்ளன.
எல்லாம் கிடைக்கும் ஆனால் மண்டபம் கிடைப்பது குதிரை கொம்பு.
கடைசியில் ரம்யா வின் மாமனார் சொன்னார்,
ஏற்கனவே இரண்டு பக்கத்திலும் கொஞ்சம தாமதம் ஆகியிருக்க, நாம் கல்யாணத்தை வடபழனி முருகன் கோயிலில் வைத்து கொண்டு ஹோட்டலில் ரிசப்ஷன் வைத்து விடுவோம் என்றார்.
“ரொம்ப சந்தோஷம் மாமா.
அந்த முருகன் சன்னதியில் கல்யாணம் நடக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் “என்று அம்மாவும் சொல்லவே வேலைகள் துரிதமாக நடந்தது.

சித்திரை மாதம் முதல் முகூர்த்த நாள் :சௌ பாக்யாவதி ரம்யாவின் கழுத்தில்
சிரஞ்சீவி
சுந்தர் மூன்று முடித்து போட்டுத் தன்னவள் ஆக்கி க் கொண்டான்.

இனி என்ன?அம்மாவை அழைத்துக் கொண்டு நான் அதே ரயில்,அதே சமயம்,ஆனால் அமைதியாக காட்பாடிக்கு பிரயாணம் ஆனேன்.