
கால்கள் கெஞ்ச கெஞ்ச
நடக்க வைப்பான்
சப்தமில்லாமல்
கைத்தடியை கைக்கெட்டா தூரத்தில்
நகர்த்தி விடுவான்
அதை நான் சார்ந்து இருப்பதறிந்தும்
பல முறை குனியச் செய்வான்
என் முதுகு
ஒத்துழைக்க மறுப்பது தெரிந்தும்
வலுவற்ற
கரங்களால்
பளு
தூக்க வைப்பான்
களைப்பின் விளிம்பில் நிற்கும் சமயம்
மாடிப்படி ஏறி இறங்க வைப்பான்
இரு முறை
மூச்சு வாங்குகிறது
என்றால்
புன்னகையுடன்
“அது நல்லதுதான். நிறுத்தாதீங்க”
என்பான்
நன்றி அவனுக்கு – தொலைந்து போன
எனது இயக்கத்தை
மீட்டுத் தந்தான்
என் உடற்பயிற்சியாளன்
எனது சிறந்த ஆசான்
