அப்பா/ஸ்ரீதர்

கருவறையில்
எனை தந்து

திருஉருவம்
தனை தந்து

நெஞ்சில்
உதைக்க சிரித்து

கொஞ்சி
தோளில் சுமந்து

மீசை
முளைக்கையில்

ஆசை
களை எடுத்து

கலைகள்
பல தந்து

நிலை புகழ்
வருகையிலே

சிலையாய் சிரிக்கும்
என்
அப்பனுக்கு
அன்பு வணக்கம்!