நம்பிக்கையின் மறுபெயர்/செ.புனிதஜோதி

கரிசல்பூமியில்
வாழ்ந்த பாட்டிக்கு
வெம்மையும்
உழைப்பும்
அவள் தோளை விட்டு
இறங்காத
சவலைப்பிள்ளைகள்

அம்மா
மலையடிவாரத்தின்
வசந்தகாலத்தை
மிடறு
மிடறாய்
பருகி வளர்ந்தவள்

அவ்வளவு எளிதாக
வசந்தத்தை
உதறி விட்டு
கோடை ஏற்கும்
காலமாய்
எப்படி மாறினாள்?

இலை
நம்பியது
மரத்தின்
கரங்களில்
வசந்தமிருப்பதாய்

அம்மாவும்
அப்படியாகத்தான்
உணர்ந்திருக்க கூடும்
அப்பாவை.