எஸ். சண்முகம் கவிதை

விரும்பும் வரை
வேறு எதனுடனோ அணுக்கம் காட்டி வந்துள்ளேன்
சுவரோர மேசையில்
நகைக்கும் புத்தரின் சிலையின்
உதடுகள் சுழிக்கின்றன

விரும்பாத ஒன்று
நெருங்கிவர அனுமதிக்காவிடினும்
சற்று அப்பாலிருக்கும்
ஆடியின் முன் நின்று
தானாக நகைக்கும்வரை காத்திருப்பதைத் தவிர
எனக்கென்று வேறு பிரத்யேகமான உபாயமில்லை.