பூனை நல்ல பூனைதான்/ஹரணி

1.

எலிகள் இரக்கம் மிக்கதாய் நடித்தன
பெருச்சாளி பேசித் தீர்க்கலாமெனப் பொய்த்தது
பூனையின் இறப்புச் சான்றிதழ் இப்படியாகப்
பூனை நல்ல பூனைதான்.

2.

புலிகள் பூனையின் பெருமை பேசின
பூனைகள் புலியென மிரட்டிப் பார்த்தன
யார் வாய்க்கு நாமென்று எலிகள்
பூனை நல்ல பூனைதான்.

3.

மனிதன் தேவையில்லை என்றன பூனைகள்
பூனைகள் சாகணும் என்றன எலிகள்
எலியைக் கொல்லப் பூனை தேவை
பூனை நல்ல பூனைதான்