கழுத்து வலியை போக்கிய கருணாமூர்த்தி/காஞ்சி மாமுனிவர்

*கழுத்து வலியை போக்கிய கருணாமூர்த்தி* கருணைதெய்வம்காஞ்சி மாமுனிவர் – நுாலிலிருந்தது

பெரியவாளின் சரித்ரம் – Part 589. 21 Jun 2020

.எட்டு வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் கையை வைத்துக் கொண்டு, அழுது கொண்டேயிருந்தான். ஒரு கட்டத்தில் அழுகை அதிகமானது. பையனிடம் பெற்றோர் கேட்டதற்கு கழுத்தில் வலி கடுமையாக இருப்பதாகச் சொன்னான்.

.குழந்தையின் தாயார் பையனை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார். டாக்டர் சோதித்து விட்டு, கழுத்து நரம்பில் பிரச்னை இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

.அந்த தாயாருக்கோ பணக்கஷ்டம். கழுத்தில் கத்தி வைத்தால் என்னாகுமோ என்ற பயமும் ஏற்பட்டது. அவர் தன் அண்ணியை அழைத்தார். “அண்ணி… காஞ்சிப் பெரியவருன்னு சொல்வாங்களே… அவர் கிட்ட ரொம்ப சக்தி இருக்கிறதா சொல்றாங்களே.. நாமும் குழந்தையை அழைத்துக் கொண்டு அங்கே போய் அவரை தரிசித்து பிள்ளையைப் பற்றிக் கேட்டு வரலாம்” என்றார்.

.இருவருமாக தங்களின் சொந்த ஊரான செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் சென்றனர்.

.அவர்கள் சென்ற அன்று மகாபெரியவர் மவுன விரதத்தில் இருந்தார். அன்று அவர் “காஷ்ட மவுனம்’ அனுஷ்டித்தார். அதாவது ஜாடையாக கூட பேச மாட்டார். இவர்கள் பெரியவரை ஒரு வழியாக தரிசித்து பிரச்னையைச் சொன்னார்கள். அவர்கள் சொன்னதைக் காது கொடுத்து கேட்டாரே தவிர, பதிலேதும் சொல்லவில்லை. தன் கழுத்தை தடவிக் கொண்டே உள்ளே போய் விட்டார்.

.அந்த பையனின் தாயாருக்கு மிகவும் ஏமாற்றம். ஒரு வார்த்தை கூட பேசாமல், ஜாடை கூட காட்டாமல் சென்று விட்டதை எண்ணி வருத்தப்பட்டார். மறுநாள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தார்கள். டாக்டரும் சென்று அறுவை சிகிச்சைக்கு தேதியும் குறித்து விட்டனர்.

.திடீரென அந்த சிறுவன், “அம்மா… தொண்டையில் என்னவோ போலிருக்கு” என்றான். சிறுவனின் தாயார் கலங்கி விட்டார். “கண்ணா…என்னடா ஆச்சு?” என்று விசாரித்தார். அப்போது குழந்தை வாந்தி எடுத்தான். தொண்டையில் இருந்து தேங்காய் ஓடு சில்லாக வெளியே வந்து விழுந்தது. சற்று நேரத்தில் நிம்மதி பெருமூச்சு விட்டவனாக, “அம்மா… சரியாயிடுத்து” என்றான். என்றாலும், மறுநாள் மருத்துவமனைக்குப் போனார்கள். டாக்டர் கழுத்தில் கை வைத்து அழுத்தி, “வலிக்கிறதா?’ என்று கேட்டார். கொஞ்சம் கூட இல்லை என்று பதிலளித்தான் சிறுவன். அறுவை சிகிச்சை தேவையில்லை என்று டாக்டரும் சொல்லி விட்டார்.

.பையனுக்கு உடலில் வலி போச்சு! பெற்றவர்களுக்கு மனசில் வலி போச்சு! அதன்பின் அந்த குடும்பத்தினர் பெரியவரின் நிரந்தர பக்தர்களாகி விட்டனர்.

May be an image of 1 person

All reactions:

414You, Natarajan Srinivasan and 412 others