வாழ நினைத்தால் வாழலாம்/அனங்கன்

(1)

வாழ்வதென்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது…
இன்பம் துன்பம் மனிதனுக்கானது மட்டுமல்ல…
கடவுளைக் கைகூப்பி நிற்பதில்லை எவ்வுயிரும்….
வாழ நினைத்தால் வாழலாம்.

                (2)

அந்தகர்கள் ஒருவர் தோள் தொட்டு….
ஒருவராய்க் கடக்கிறார்கள் பரபரப்பான
அச்சா
லையில்….
காதுகளால் வாழ்வது அவர்களுக்கு எளிது….
வாழ நினைத்தால் வாழலாம்.

                 (3)

இரண்டு கால்ஊன்றி நடக்கிறது அந்நாய்….
முன்னிரு கால்கள் அதற்கு இல்லை…
போராட்டம்தான் எந்நாளும்
பழகிவிட்டது சூழல்…
வாழ
நினைத்தால் வாழலாம்.

                   (4)

பிச்சையெடுத்து வாழ்வது பிடித்தமானது இல்லை…
ஒவ்வொரு முறையும் இரந்து
இறக்கிறோம்…
குறிக்கோள் எதுவுமில்லை
பிறந்தாகிவிட்டது …எப்படியும்
வாழ நினைத்தால் வாழலாம்.

                (5)

தற்கொலை முயற்சிக்கு காரணம் தேவையா…?
மனம் சிணுங்கிக் கொண்டிருக்கிறது எப்போதும்…!
பிறரிடம் அன்பு செலுத்து சரியாகும்…
வாழ நினைத்தால் வாழலாம்.