வாழ நினைத்தால் வாழலாம்/சசிகலா விஸ்வநாதன்

என்பா-1

மருத்துவ படிப்பில்
சேர்க்கையிடம் கிட்டாவிடினும்
வானம் இடிந்திடவில்லை;
பூமி பிளந்திடவில்லை;
முயற்சி உடையார்,
இகழ்ச்சி அடையார்.

வாழ நினைத்தால் வாழலாம்.

என்பா-2

புற்று நோய்
பரவி விட்டது:
வேதி மருத்துவம்
ரேடியம் மருத்துவம்
என பல பாடு பட்டாலும்
வாழ நினைத்தால் வாழலாம்.

என்பா-3

ஐவர் சூதில் தேசம்
தோற்றார்
நன்மையான நால்வர் தேசம் துறந்தார்
இறையருள் இன்னருள் மழை பொழிய

வாழ நினைத்தால் வாழலாம்.

என்பா-4

முப்பது வருடம்
முன்னால் நீங்கள்
வாழ வந்த வீட்டிற்கு
வாழ
வந்துள்ளேன், இன்று;
வியனலுகம் வியக்க,

வாழ நினைத்தால் வாழலாம்.

என்பா-5

சாலை ஓர எலிகளும், பெருச்சாளிகளும்,
ஜலதாரை ஓர
கரப்பான்களும், பாச்சைகளும்,
மனிதர் கண்ணுக்குத்
தப்பி வாழ….

வாழ நினைத்தால் வாழலாம்

சசிகலா விஸ்வநாதன்
22-6-2023