
மேகம் நினைத்தால் கோடைமழைப் பொழியலாம்!
இருப்போர் நினைத்தால் இல்லார்க்கு உதவலாம்!
அதிகாரம் நினைத்தால் ஆதாயமின்றி கடமையாற்றலாம்!
வாழ நினைத்தால் வாழலாம்!
புள்ளி இல்லாமல் கோலம் போடலாம்!
அல்லி மலராமல் சந்திரன் வளரலாம்!
ஏழையர் சிரிப்புடன் இறைவன் உறையலாம்!
வாழ நினைத்தால் வாழலாம்!
நீதியும் காவலும் நடுநிலை வகிக்க,
சாதியும் மதமும் இணக்கமாய் இருக்க,
ஊடகம் மக்களுக்கு உண்மையை உரைக்க,
வாழ நினைத்தால் வாழலாம்!
