1.
என்றும் பதினாறு வயது வாலிபர்,
அறுபதிலும் அவர் புது மாப்பிள்ளை,
மனதில் உற்சாகம் ஆறாக பெருகிட,
வாழ நினத்தால் வாழலாம்!
2.
கல்லுக்குள் ஈரமுண்டு யாருக்கு தெரியும்?
மண்ணுக்குள் வீரமுண்டு எவருக் குப் புரியும்?
நெஞ்சுக்குள் நீதி உண்டு அறியவும்,
வாழ நினத்தால் வாழலாம்!
3.
பூமியை பிளந்து தலைதூக்கும் விதை,
மனதை பிசைந்து வெளிவரும் துக்கம்,
இமைகளை தாண்டி பெருகும் நீர்,
வாழ நினைத்தால் வாழலாம்!
