
1.
எண்ணற்ற துன்பங்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும்
தோல்விகளும் துயரங்களும்
துரத்தியே வந்தாலும்
சிந்தையில் துணிவுடன் நம்பிக்கை சேர்த்து
வாழ நினைத்தால் வாழலாம்!
2.
தினம்தோறும் போராட்டம் ஓய்வே இல்லை!
கையில் காசில்லை !
தொழிலில் நிறைவில்லை!
என்றாலும் ஈசனைத் தொழுது நின்று
வாழ நினைத்தால் வாழலாம்!
