கவிதை வாசிக்கலாம்22/6/23 மெய்நிகர் அமர்வு/எஸ்ஸார்சி

பாழாய்ப்போன உலகம் இது
நல்லவர்களை ஐயப்படும்
அல்லவர்களைப்பஞ்சு மெத்தையில் பல்லக்கில்
தூக்கிச் சுமக்கும்
பிரார்த்தனைக்கூட்டத்தில்
தேசபக்தி காந்தியைச் சுட்டுக்கொன்ற தேசம் இது
மறப்போம் மன்னிப்போம்
எதனை மறப்பது
எதனை மன்னிப்பது
சீதையைநெருப்பில்
இறங்கிவா என்றவன்தானே
இங்கே புருடோத்தமன்
வண்ணாத்தி சொல்லுக்காகக்கருவுற்ற
மனைவியைகாட்டுக்
கனுப்பியகருணாகரனை
யாரப்பா கேட்பதுகேள்வி.

மனிதம்

மணிப்பூரில் என்னதான்
நடக்கிறது சொல்லுங்கள்
இந்தியா என் தாய்நாடு
இந்தியர் யாவரும் என் உடன்
பிறந்தோர் நீர்த்துப்போகிறதே ஏன்
படித்தவர்கள் பாவம் செய்கிறார்கள் எதுஎதனைக்கொண்டு
வரும் அறியாமலா சட்டங்களும்திட்டங்களும்
அமலாகும்
வேற்றுமையில் ஒற்றுமை
நீட்டி முழக்கியபுனித
பூமியில்
இனச்சண்டைதீவைப்புகொலை
சந்திரனுக்கு மனிதனை அனுப்பலாம் சாவுகாசமாய்
புண்ணிய பூமியில் மனிதனை காட்சிப்படுத்துங்கள்
முதலில்.

ஒரே கடவுள்

முட்டிக்கொள்கிறார்கள்
வரவில்லையே முடிவு
இருநாட்டாரும்
லட்சம் பேருக்கு மேல்
செத்துப் போனார்கள்
கொரானா கொள்ளைநோய்
வந்து கொத்துக்கொத்தாய்
செத்தபோது வானம்கேட்க
ஒப்பாரிவைத்து அழுதவர்கள் வாய்மூடி
மவுனம் காக்கிறார்கள்
யுத்த தளவாடங்கள் கோடானகோடிக்கு
மும்முரமாய் வியாபாரம்
பிரதானம் அது
புடினுக்கும் செலஸ்கிக்கும்
ஏசுநாதர் ஒரே கடவுள்.