-சௌவி
பெய்து கொண்டிருக்கிறது மழை
என் மீது
உன் முத்தங்களைப் போல
மரங்கள் செடிகள்
மாடுகள் என
எல்லாமே நனைகின்றன
மனிதர்கள் மட்டும் குடைகளால்
மழைக்குக்
காட்டுகிறார்கள்
தேவதைகள் மட்டும்
மழைக்கு
வண்ணக்குடைகளால்
வரவேற்புக் கவிதைகளை
வாசிக்கிறார்கள்
கருப்புக்குடை வைத்திருப்பவர்களிடமிருந்து
தள்ளிவிழும் மழை
வண்ணக்குடையோடு வரும்
வடிவழகிகளைத் தழுவிக்கொள்கிறது
கடலை
உடைத்து உடைத்து நழுவவிடும்
மேகங்களுக்கப்பாலிருக்கும்
நட்சத்திரங்கள்
உன்னைப் பார்க்க முடியாத ஏக்கத்தில்
அழுதுகொண்டிருக்கும் சப்தம்
மழைச்சப்தத்தையும் மீறிக் கேட்கிறது
கொஞ்சநாட்கள் நட்சத்திரங்கள் அழட்டும்
இன்னும் இன்னும்
இப்படியே மழை பெய்யட்டும்
மழை மட்டுமே பூமியை
இவ்வளவு அழகாய்க் காட்டும்
-சௌவி
