ஓவியம்/விஜயலக்ஷ்மி கண்ணன்

கலா இத்தோடு மூன்று தரம் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து எட்டி பார்த்து திரும்பி வந்து விட்டாள்.
சரவணன் திரும்பி பார்க்கவில்லை. அவனுடைய கவனம் முழுவதும் அவன் வரைந்து கொண்டிருந்த ஓவியம் மீது தான்.
எப்பொழுதும் காலை காபிக்கு ரெடியாக நிற்கும் சரவணன் திரும்பி க் கூட பார்க்காமல் மும்முரமாக தூரிகையும் வண்ணமும் கொண்டு சித்திரம் தீட்டிகொண்டிருக்க காபி நினைப்பு கூட வரவில்லை.

சரவணன் மிக நேர்த்தியான ஓவியக் கலைஞன்.

பொறுமை காக்க வேண்டும் என்று நினைத்தாலும் இனியும் பொறுக்க முடியாது என்று தோன்றி கையில் காபி கோப்பையுடன் அறையின் உள்ளே நுழைந்து கதவை தாளிட்டு விட்டு சரவணன் அருகாமையில் அமர்ந்தாள் கலா.

இமைக் கொட்டாமல் ஓவியத்தை கவனித்தாள்.
மனதில் சிரிப்பு வந்தது.எப்படி முடிந்தது,என்னை.அப்படியே வரைய,
“சரவணன்,என்ன இது,யார் இது?
கண் எதிரே உள்ள என்னை கண்டு கொள்ளாமல் என் ஓவியத்தை வரைந்து என்னைப் படுத்தி எடுக்கிறீர்கள்!”
கொஞ்சும் சிணுங்கினாள் கலா .அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

சரவணன் இன்னும் முடிக்கவில்லை.
இன்னும் கொஞ்சம் உயிர் ஓட்டம் ஏற்ற வேண்டும். “கலா,. நீ காபியை கொடு.”

குடித்து முடித்து விட்டு அவள் கையில் காலி கோப்பையை திணித்து,”நீ கிளம்பு, நானே முடிந்தவுடன் வரேன்”என்று சொல்லி விட்டு கண்களை ஓவியத்தின் மீது திருப்பினான்.

மணி 10 அடித்து 10 நிமிடங்கள் ஆகிவிட்டன.
“கலா, இன்று என்ன நாள்? மறந்து விட்டேன் என்று சொல்லாதே” திரும்பிய
கலா “இன்று என்ன நாள்”என்று யோசித்து,
“ஆஹா,என் அன்பே, என்னுடைய பிறந்த நாள் “என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டு சரவணனை இதயத்தோடு அணைத்துக் கொண்டாள். தன்னை மறந்தாள்.இந்த உலகையே மறந்தாள்.

ஓவியமும் காவியம் பேசும்.