முற்பகலும் பிற்பகலும்

பேயோன்

முற்பகலும் பிற்பகலும்

கெட்டது செய்தால் கேடு விளையும் என்று
நன்றாக மண்டையில் ஏற்றிவிட்டார்கள்
கெட்டது செய்தவனுக்கு எங்கே கேடு வருகிறது?
கோடியில் மக்கள் பணத்தைச் சுருட்டியவன்
வெளிநாடு போய்ச் சொகுசாக வாழ்கிறான்
ஆயிரம் பேரைக் கொன்று குவிப்பவன்
உள்நாட்டிலேயே பதவிசாக இருக்கிறான்
கெட்டவனுக்குத் தீமை வருவதில்லை
தீமையும் அவனைத் தலைவனாக ஏற்கிறது.


2 Comments on “முற்பகலும் பிற்பகலும்”

Comments are closed.