வேதாளம்

இன்று மட்டும்
வேதாளத்தை தோளிலிருந்து
இறக்கி வைக்கலாம்
இரவு தொடங்கி
இடைவெளியின்றி
டப்டப் சத்தம்
கேட்டுக் கொண்டே இருக்கும்
வானத்தில் வெடித்துச்
சிதறும் பட்டாசை
விழிவிரித்துப் பார்ப்போம்
மாலையிலிருந்தே
விதவிதமான வாழ்த்து அட்டைகள்
வாட்ஸ்அப்ல் வரத் தொடங்கிவிடும்
தீபத்தில் இன்று இரவுமுழுவதும்
பூமிப்பந்து ஜொலித்துக்
கொண்டிருக்கும்
விடிந்ததும் ராட்சச
வேகத்தில் கடிகார முட்கள்
சுழல மாலை வந்துவிடும்
குதூகலம் குறைந்துவிடும்
வேதாளம் முருங்கை மரத்திலிருந்து
மீண்டும் வந்து
தோளில் அமர்ந்து கொள்ளும்
எப்படித் தப்பிப்பது என்ற
யோசனையிலிலேயே நாட்கள்
நத்தை போல்
நகர்ந்து கொண்டிருக்கும்!

ப.மதியழகன்