இதற்கினி ஞானம் எதற்கு ‌?/கேள்விக்காரன்…

1.

வாழ்வில் எருதோ
காளையோ பசு‌வோ
கட்டப்படும் கொட்டிலிலும்
முளையிலும் இல்லை
உரிமையாளர் வணிகத் தேவையறிதல் அன்றி

இதற்கினி ஞானம் எதற்கு ‌?

2.

திடீர் மழையில் பாதையெங்கும்
குளமானதில்
கடந்து சென்ற பஸ் இறைத்த
சேறும் சகதியில் உடை அழுக்கானதில்

இதற்கினி ஞானம் எதற்கு

28/06/2023