இனி என்ன செய்வது?/கு.மா.பா.திருநாவுக்கரசு

  1. முக்கால் ஆற்றை நீந்திக் கடந்தவன்
    முடியவில்லை என்று திரும்பக் கூடாது!
    சிக்கலைத் தீர்க்க பொறுமை வேண்டும்!
    இனி என்ன செய்வது?

2.

தக்காளி விலை ஏறிப்போச்சு என்று
பப்பாளி ரசம் வைக்க முடியுமா?
வக்கணையா வாய்க்கு ருசியா உண்போர்
இனி என்ன செய்வது?

3.

பாப்பாவுக்கு பாட்டு எழுதின‌ பாரதி,
சாதிகளின் பேரால் மோதிக் கொல்லும்
தாத்தாக்களுக்கு கவி எழுதாம போயிட்டாரு?
இனி என்ன செய்வது?