இனி என்ன செய்வது?/சசிகலா விஸ்வநாதன்

                 (1)

அரிசி சோறு அறவே இல்லை;
கேப்பங்களியும் கம்பங்கூழும் காலையும் மாலையும்
சர்க்கரை அளவு என்றும் ஏறுமுகம்

இனி என்ன செய்வது?

                (2)

பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து;
அயல் நாடு அனுப்பி திருமணம் செய்வித்து;
பணி அயர்வில் இல்லமதில் ஓய்ந்தாயிற்று.

இனி என்ன செய்வது?

            (3)

நமசிவாயம் நாளும்
நயமாய் ஓதியாகிறது;
சிவனே! சிவனே சித்தம் என்னும்;
அறிவம்பலத்தில்
ஆனந்த நடனம் காண;

இனி என்ன செய்வது?

29-6-2023