இனி என்ன செய்வது?/ஹரணி

1.

உறவுகள் மொய்த்து உவகை வாசமிருந்தது
அப்பா இறந்து இப்போது அம்மாவும்
தனிமை மொய்த்து கிடக்கும் வீட்டில்
இனி என்ன செய்வது?

2.

சாலைகள் விரிவாக்கம் வேரறுந்த மரங்கள்
புதிய சாலைகள் பாலை தோற்றம்
பழைய சாலைகள் மரண பயத்தில்
இனி என்ன செய்வது?