இனி என்ன செய்வது/விஜயலக்ஷ்மி கண்ணன்

1.

கையில் காசில்லை
கால்களில் வலு வில்லை,
மனதில் சற்றும் தெம்பு இல்லை
மண்ணை திங்க மனம் இல்லை
இனி என்ன செய்வது?

2.

துக்கத்திற்க்கு வந்தவர்கள் போய் விட்டார்கள்,
சந்தைக்கு வந்தவர்கள் வழித் துணையாகுமா?
நமக்கு நாமும் தூணுக்குப்
பெரையும்.
இனி என்ன செய்வது?

3.

ஆடி ஓடி வாழ்ந்த காலம்,
ஆடாமல் அசையாமல் கிடக்கும் பாட்டி,
இப்பவா,அப்பவா எப்பவோ தெரியவில்லை
இனி என்ன செய்வது?