
(1)
இன்றைக்கானக் கவலைகள்
எழும்போதே தொடங்கிவிட்டன…
நேற்றையக் கவலைகள் நிலுவையில் இருக்கின்றன…
வாழ்தலென்பது இப்படித்தான்…நாளையும் வரும்.
இனி என்ன செய்வது….?
(2)
பொய்களே கூடாதென்கிறது
வடித்த அறநூல்கள்.
தமிழ் படித்தவனிடமும் பொய்களே முந்துகின்றன…
படித்ததெல்லாம் பொய்யா…
படித்தவனே பொய்யா…?
இனி என்ன செய்வது…?
(3)
அறமீறல்கள் எக்காலத்திலும்
எப்போதும் உண்டு…
கடவுள்கள் வந்ததே அறம் மீட்கத்தான்….
கதையென்று தள்ளிவிட்டாய்
எளிதாய்….நம்பினோர்
இனி என்ன செய்வது….?
(4)
பழகும்போதே அலைபேசியில்
அனைத்தும் சொல்லியாகிவிட்டன.
மணம்முடித்தபின் பேசப் புதிதாய் ஒன்றுமில்லை…
முதல்நாளே வெற்றிடம் நிரம்பி வழிகிறது…
இனி என்ன செய்வது….?
(5)
கவிதை எழுதுவது மனத்திற்கு
ஆறுதல்தான்…
அனைத்தையும் வாசித்து கைஉயர்த்த ஆள்வேண்டுமே..
என்பா எழுதுவது எளிதாகிவிட்டது எல்லோருக்கும்….
இனி என்ன செய்வது….?
♦
