
என்பா 140
எழுத முடியவில்லைf
என்றால் எழுதாதே
படிக்க முடியவில்லை
என்றால் படிக்காதே
சும்மா இருக்கக்
கற்றுக் கொள்
இனி என்ன செய்வது?
என்பா 141
வயதாகி விட்டதால்
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்
உன்னிடம் பணமிருந்தால்
செலவழிக்க அஞ்சாதே
இந்த வாழ்க்கை
இனிமேல் இவ்வளவுதான்
இனி என்ன செய்வது?
என்பா 142
யாரிடமும் கவிதைப்
புத்தகம் இலவசமாகக்
கெடுக்காதே. யாரும்
படிக்க மாட்டார்கள்
கவிதை எழுதியதால்
தூற்றவும் செய்வார்கள்
இனி என்ன செய்வது?
என்பா 143
எங்கள் தெருவில்
ஒரு பெண்
அழகாய் இருக்கிறாள்
கண்ணில் தட்டுப்பட்டால்
அன்றைய பொழுது
சிறப்பாகப் போகும்
இனி என்ன செய்வது?

படிக்க விரும்பாமல் படிப்பது வதை.அழகிய பெண் இதம்.