ஏன் ராமா?/உமா பாலு

இந்திர தனுஸை முறித்த ராமா
மந்திரை சூழ்ச்சியில் மடங்கியதேனோ
தந்தை கைகேயிக்கு தந்த வரத்தால்
உந்தன் சீதையும் மரவு்ரி தரித்தாள்
உன்னுடனேயே கானகம் சென்றாள்
தம்பி இலக்குவன் தானும் வந்தான்
ஊர்மிளை துயரொடு மீளாத்துயிலில்
ஈரேழு வருடம் கணவனைப் பிரிந்து.
சீதை உன்னுடன் சேர்ந்திருக்கையில்
பேதை அவள் பொழுது மறந்து மாளிகையில்!
சீதைக்கு ராமன் செல்லுமிடம் அயோத்தியெனில்
ஊரமிளைக்கும் இலக்குவன் இருப்பிடம்தானே அயோத்தி?
ஏன் ராமா ஏன்?


29/6/23