மகிழ்ச்சியின் விளக்கம் /ராஜாமணி

குழந்தையுடன்
நாம் இருந்தால்
மகிழ்ச்சி.
குழந்தைகளுடன்
நாம் இருந்தால்
அதை விட மகிழ்ச்சி
குழந்தையாகவே
நாமும் இருந்து விட்டால்
மட்டற்ற மகிழ்ச்சி.