எஸ். சண்முகம் – 114 வது கவிதை

ஒவ்வொரு நாளும்
விநாடி முட்களற்ற கைக்கடிகாரத்தில்
நிமிடம் சுட்டும் கரம்
அடுத்த நிமிடத்திற்குள் நகர்வதை பார்த்துவிடலாமென்று இருக்கும்போது

விநாடி முள் இருக்கும் ஞாபகம் வருகிறது
சதா நகர்ந்து கொண்டே இருந்தாலும்
நொடிகளுக்கிடையில் உள்ள நுண்வெளியைக் காண
நினைத்து முன்னதை தவரவிட்டுவிடுவதாகிறது

சுவர்கடிகாரத்தின் அருகில் இருக்கும் பல்லியும் அதனருகே
பறந்து கொண்டிருக்கும் பூச்சியொன்றிலேயே அதன் கவனம் ஊன்றியிருக்கிறது

தெரிந்தவர்களின் விசாரிப்பு சொற்களைக் காட்டிலும்
முதன்முறையாக எதிர்படும் ஒருவரது
பிறழ் அடையாளத்தினூடே முகிழும்

இருபத்து நான்கு மணிநேரத்தின்
அத்துணையும்.