
சொல்லாமல் கொள்ளாமல்
ஏறிவிட்டது விலைவாசி…
வயிற்றுக்குத் தெரியாது
வாழ்வின் இடர்கள்…
ஆள்வோர்கள் யார்வரினும்
அவலத்திற்குப் பஞ்சமில்லை.
விரல் மைக்கு விடிவில்லை.
(2)
சொல்லாமல் கொள்ளாமல்
ஏறிவிட்டது விலைவாசி…
யாரிடம் சொல்லவேண்டும்
அட்டவணை இருக்கிறதா…?
சும்மா வரவில்லை
இந்தச் சுதந்திரம்…
வாக்கு விலையை ஏற்று.
(3)
சொல்லாமல் கொள்ளாமல்
ஏறிவிட்டது விலைவாசி….
அப்பாடி விடிந்தது உழவனுக்கு
விளைபொருளால்..
பயன் அவனுக்கில்லை பார்த்துப் பேசு…
விதைநெல் நனைகிறது மழையில்.
(4)
சொல்லாமல் கொள்ளாமல்
ஏறிவிட்டது விலைவாசி….
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவிடமுடியாது குடும்பத்தில்…
ஊதியம் ஏறவில்லை எவ்வளவு உழைத்தாலும்.
பிச்சையெடுக்கப் பிறக்கவில்லை யாரும்.
(5)
சொல்லாமல் கொள்ளாமல்
ஏறிவிட்டது விலைவாசி….
பொருளாதார நிபுணர்கள்
வாதிக்கிறார்கள் வகைவகையாய்…
உனக்கொன்றும் புரியாது
தொலைக்காட்சியை அணை.
நாளை யாரிடம் கடன்கேட்கலாம்.
♦

விதை நெல் நனைகிறது மழையில்!
அருமை ஐயா!