ஏகாந்தத்தின்
தீரா புள்ளிகளை
தீட்டிய வரைவுகளாய்
பிரதிபலிக்கிறது
ஓவியங்கள்!
ஆரவாரங்களில்
நடுங்கிய படியே
நழுவி நிற்கிறது
ஒரு கூச்சல்!
இரவின் வீதிகளில்
கண் சிமிட்டும் நட்சத்திரங்களிடையே
ஒரு மௌனத்தை
உணர்த்திய படியே நகர்கிறது
வான் நிலவு!
இருளின் ஒளிச் சுடரில்
மட்டும்…
அத்தனை முகங்களும்
அழகாய் பிரகாசிக்கிறது!
பெரும் வனத்தில்
இறுகிய மலைகள்
எப்போதும்…
சப்தமிடுவதில்லை!
முடிவிலியாய் தொடரும்
நதியின் ஓட்டத்தில்
தொடக்கம் தான் எங்கே?
இயல்புகள் அற்ற
நெடும் பயணத்தில்
சிறு தூறலாய்
பெய்யவே…! ஆசைப்படுகிறது
ஒரு மழை!
ஆனால்…?!
நிறமற்ற உலகின்
இந்த நிசப்தங்களை
யார் தான்
விரும்புவார்கள்?
(மீள்)

All reactions:
16You, Kandasamy R, Kalaiselvi and 13 others
